| `கொச்சகக் கலிஐங் கூறு பாடென தரவே தரவிணை தாழிசை சிலபல சிலபிறழ்ந் துறழ்ந்தும் சிலமயங் கியுமாம்.' | | | - தொ. வி. 234 | | |
| `வெண்கலிக்கு அளவடி பலதளை பலதொடை மண்டிஈற்று அசைச்சீர் வந்துசிந் தடியாம் கலிவெண் பாவெண் கலிஎன நடப்பினும் வலிவெண் டளைதவா வரவும் பலதொடை நேரிசை வெண்பா நேரவும் பெறுமே.' | | | - 235 | | |
| `கட்டளைக் கலிப்பா காட்டுங் காலை ஒருமா கூவிளம் ஒருமூன்று இயைய நேர்பதி னொன்றுநிரை பன்னீ ரெழுத்தாய் நடந்துஅடிப் பாதியாய் நான்கடி ஒத்தவாய் வருவது இன்று வழங்கும் நெறியே.' | | | - 236 | | |
| `தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் எனுநான்கு உறுப்பினது ஒத்தா ழிசைக்கலி.' | | | - மு. வீ. யா. செ. 35 | | |
| `அளவடி சிந்தடி குறளடி ஆகும் அசையடி ஆகிய அம்போ தரங்க உறுப்பைத் தாழிசை தனிச்சொற்கு இடையில் கொண்டு தரவு தாழிசை அம்போ தரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஐந்துறுப் போடும்வரல் அம்போ தரங்க ஒத்தா ழிசைக்கலி யாமுரை தரினே.' | | | - 36 | | |
| `தாழிசை அம்போ தரங்கக் கிடையே அராகம் அடைந்துமுன் தரவு தாழிசை அராகம்அம் போதரங்கம் தனிச்சொல் சுரிதகம் ஆறொடு தோன்றுவ வண்ணக ஒத்தா ழிசைக்கலி யாமுரை தரினே.' | | | - 37 | | |
| `தரவுகொச் சகமொரு தரவொடு போதரும்.' | | | - 38 | | |