|
| `தரவிணைக் கொச்சகம் தான்இரு தரவொடு தனிச்சொல் சுரிதகம் தழுவியும் வருமே.ழு | | | - மூ. வி. யா. செ. 39 | | |
| `தரவொடு தாழிசை மூன்று தனிச்சொல் சுரிதகம் நான்கின ஆகும்சிஃ றாழிசை.ழு | | | - 40 | | |
| `தரவொன்று தாழிசை ஆறு தனிச்சொல் சுரிதகம் நான்கின ஆம்பஃ றாழிசை.ழு | | | - 41 | | |
| `மயங்கி வருவது மயங்கிசைச் கொச்சகக் கலிப்பா என்மனார் கற்றுணர்ந் தோரே.ழு | | | - 42 | | |
| `கலித்தளை தட்டுக் கலியொலி விரவியும் வெண்டளை தட்டு வெள்ளொலி தழுவியும் ஈற்றடி சிந்தடி யாய்வரல் வெண்கலிப் பாவாம் எனப்பெயர் பகரப் படுமே.ழு | | | - 43 | | |
29 |
கலிப்பா இனம் |
739. | அடிஎனைத் தாகியும் ஒத்துவந்து அளவினில் கடைஅடி மிகுவது கலித்தா ழிசையும், நெடில்அடி நான்காய் நெறிப்படி நிகழ்வது கலித்துறை ஆதலும், கலிப்பா விருத்தம் அளவுஅடி நான்கினது ஆதலும் விதியே. | | | | | |
இது மேல்கூறிய கலிப்பாவிற்கு இனம் ஆகிய தாழிசை துறை விருத்தங்கள் ஆமாறு கூறுகின்றது. இ-ள் : அடிகள் பலவாயும் சிலவாயும் தம்முள் அளவு ஒத்துவந்து ஈற்றடி மிக்கு வருவது கலித்தாழிசை ஆதலும், ஐஞ்சீர் அடி நான்காய் ஒழுங்குபட நடப்பது கலித்துறை ஆதலும், நாற்சீர் அடி நான்கு உடையது கலிவிருத்தம் ஆதலும் இலக்கணமாம் என்றவாறு. `நெறிப்படழு என்றதனானே, கலித்தாழிசை தம்முள் அளவு ஒவ்வாதும் வரும் எனவும், தனியே வரப்பெறும் |
|