பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 30

195

 
ஆயினும் ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வருவது சிறப்பு உடைத்து எனவும்,

     கலித்துறை கட்டளைக் கலித்துறையும் கலிநிலைத் துறையும் என்று
இருவகைத்தாய், அவற்றுள் நேர் அசை முதலாகிய கட்டளைக் கலித்துறை ஓர் அடிக்கு
எழுத்துப் பதினாறும், நிரை அசை முதலாகிய கட்டளைக் கலித்துறை ஓர் அடிக்கு
எழுத்துப் பதினேழுமாய் வரும் எனவும் கொள்க.

     சீர் வரையறுத்திலாமையால் கலித்தாழிசை எனைத்துச் சீரானும் அடியாய்
வரப்பெறும் என்பதூஉம் பெற்றாம்.

     இரண்டு அடியாய் ஈற்றுஅடி மிக்கு ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வந்த
சிறப்புடைக் கலித்தாழிசைக்குச் செய்யுள் :
  `கொய்தினை காத்தும்; குளவி அடுக்கத்தெம்
பொய்தல் சிறுகுடி வாரல், நீ ஐய; நலம்வேண்டின்;'

`ஆய்தினை காத்தும்; அருவி அடுக்கத்தெம்
மாசில் சிறுகுடி, வாரல்,நீ, ஐய! நலம்வேண்டின்;'

`மென்தினை காத்தும்; மிகுபூங் கமழ்சோலைக்
குன்றச் சிறுகுடி வாரல்,நீ, ஐய! நலம்வேண்டின்'
 
 

- யா. கா. 34 மே.

 
என வரும்.

பல அடியாய் ஈற்றுஅடி மிக்கு ஏனை அடி மூன்றும் தம்மில் அளவு
ஒத்துத் தனியே வந்த கலித்தாழிசைக்குச் செய்யுள் :

  `வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்
கேள்வரும் போழ்தில் எழால், வாழி, வெண்திங்காள்!