|
| கேள்வரும் போழ்தில் எழாதாய்க் குறாலியரோ நீள்வரி நாகத்து எயிறே, வாழி, வெண்திங்காள்!ழு | | | - யா. கா. 34 மே. | | |
என வரும். |
பல அடியாய் ஈற்றுஅடி மிக்கு இரண்டாம் அடி குறைந்து முதல் அடியும் மூன்றாம் அடியும் தம்முள் அளவு ஒத்துத் தனியே வந்த கலித்தாழிசைக்குச் செய்யுள் : |
| `பூண்ட பறைஅறையப் பூதம் மருள நீண்ட சடையான் ஆடுமே; நீண்ட சடையான் ஆடும் என்ப, மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவேழு | | | - யா. கா. 34 மே | | |
என வரும். |
நேர் அசை முதலாகிய கட்டளைக் கலித்துறைக்குச் செய்யுள் : |
| `தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக் கானார் மலையத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல் யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால் ஆனா அறிவி னவர்கட்கென் னாங்கொலென் ஆதரவேழு | | | - யா. கா. 2 | | |
எனவும், |
நிரை அசை முதலாகிய கட்டளைக் கலித்துறைக்குச் செய்யுள் : |
| `அடிவரை இன்றி அளவொத்தும் அந்தடி நீண்டிசைப்பின் கடிதலில் லாக்கலித் தாழிசை ஆகும்; கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது; நேரடி ஈரிரண்டாய் விடின்அது வாகும் விருத்தம்; திருத்தகு மெல்லியலேழு | | | - யா. கா. 34 | | |
எனவும், |