பக்கம் எண் :

198

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

இரண்டாமடி குறைந்து இடைமடக்காய் ஈற்றடி மிக்கு வந்த
கலித்தாழிசைக்குச் செய்யுள் :

  ` காளி ஆடக் கனல்உமிழ் கண்ணுதல்
மீளி ஆடுதல் பாருமே!
மீளி ஆடல் வியந்துஅவள் தோற்றெனக்
கூளி பாடிக் குனிப்பதும் பாருமே பாருமே!'
 
 

- 71

 

நெடிலடி நான்காய்வந்த கலித்துறைக்குச் செயயுள் :

  `பானல் கருங்கண் பசுந்தோகை யோகப் பயன்துய்ப்பஅத்
தேனக் கலர்கொன்றை சாரூப் பியந்தந்த செயலோர்கிலார்
ஊனக்க ணிதுபீளை ஒழுகும் புறக்கண், உளக்கண்ணதாம்
ஞானக்க ணேயாதல் நல்கும் பிரான்தில்லை நடராசரே.'
 
 

[இது கலிநிலைத்துறை எனவும் வழங்கப்பெறும்]
- 72

 

நேரிசை முதலாகிய கட்டளைக் கலித்துறைக்குச் செய்யுள் :

  `செவ்வாய்க் கருங்கண்பைந் தோகைக்கும்
     வெண்மதிச் சென்னியற்கும்,
ஒவ்வாத் திருவுரு ஒன்றே
     உளதவ் உருவினை
மற்றெவ்வாச் சியமென் றெடுத்திசைப்பே
     மின்னருட் புலியூர்ப்
பைவாய்ப் பொறியர வல்குலெந்
     தாயென்று பாடுதுமே.'
 
 

 - 73

 

நிரையசை முதலாகிய கட்டளைக் கலித்துறைக்குச் செய்யுள் :

  `கரும்பும் சுரும்பும் அரும்பும் பொரும்படைக் காமர்வில்வேள்
இரும்பும் கரைந்துரு கச்செய்யு மாலிறும் பூதிதன்றே;
விரும்பும் பெரும்புலி யூரெம்பி ரானருள் மேவிலொரு
துரும்பும் படைத்தழிக் கும்மகி லாண்டத் தொகுதியையே.'
 
 

- 74