அளவடி நான்காய் வந்த கலிவிருத்தத்திற்குச் செய்யுள் : |
| `கூகா என்று குரைப்பதல் லால்,சமன் வாவா என்னின், வரேம்என வல்லிரே தேவே சன்பயில் தில்லையின் எல்லையில் சேர்வி ரேல்,அது செய்யவும் வல்லிரே.' | | | - சி. செ. கோ. 75 | | |
ஒத்த நூற்பாக்கள் |
| `அந்தடி மிக்குப் பலசில வாயடி தந்தமில் ஒன்றிய தாழிசை யாகும்.' | | | - காக்கை | | |
| `அந்த அடிமிக்கு அல்லா அடியே தந்தமுள் ஒப்பன கலித்தா ழிசையே.' | | | - சிறுகாக்கை | | |
| `ஈற்றடி மிக்குஅளவு ஒத்தன ஆகி பலவும் சிலவும் அடியாய் வரினே கலிப்பா இனத்துத் தாழிசை ஆகும்.' | | | - அவிநயம் | | |
| `அடிபல ஆகியும் கடையடி சீர்மிகின் கடிவரை இல்லை கலித்தா ழிசையே.' | | | - மயேச்சுரம் | | |
| `அடிஎனைத் தாகியும் ஒத்துவந் தளவினில் கடையடி மிகுவது கலித்தா ழிசையே.' | | | - யா. வி. 87 | | |
| `ஐஞ்சீர் முடிவின் அடித்தொகை நான்மையொடு எஞ்சா மொழிந்தன எல்லாம் கலித்துறை.' | | | - காக்கை | | |
| `ஐஞ்சீர் நான்கடி கலித்துறை ஆகும்.' | | | - அவிநயம் | | |
| `நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை.' | | | - யா. வி. 88 | | |
| `நாற்சீர் நாலடி வருவ தாயின் ஒலியின் இயைந்த கலிவிருத் தம்மே.' | | | - அவிநயம் | | |
| `ஐஞ்சீர் நாற்சீர் அடிநான்கு ஆயின் எஞ்சாக் கலியின் துறையும் விருத்தமும்.' | | | - மயேச்சுரம் | | |
| `நாலொரு சீரான் நடந்த அடித்தொகை ஈரிரண் டாகி இயன்றவை யாவும் காரிகை சான்ற கலிவிருத் தம்மே.' | | | - காக்கை | | |