பக்கம் எண் :

20

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
தொடர் எண்   இயல் எண்
  கவிஞன் தன் காலத்தனவாகிய செய்திகளைப் புனைந்து பாடுவது; இயைபாவது ஞணநமன யரலவழள என்னும் பதினொரு புள்ளிகளுள் ஒன்றனைச் செய்யுள் இறுதி எழுத்தாக அமைத்துப் பாடுவது; புலனாவது உலக வழக்கில் உள்ள சொற்களைக் கொண்டே யாவரும் எளிதில் விளங்கிக் கொள்ளுமாறு பாடப்படுவது; இழைபாவது ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து யாதும் தீண்டாது குறளடி முதலாக எழுத்தின் எண்ணிக்கையைக் கணக்கிட்டே கழிநெடிலடிகாறும் கொண்டு ஓங்கிய சொற்களால் அமைப்பது ஆகும் - என்பது.  
755 எழுத்து அல்லாத ஓசையும் அசையாகவும் சீராகவும் கொண்டு கணக்கிடப்படுவது குறிப்பிசை ஆகும் என்பது 46
756 ஒரோவழி அவ்வச் செய்யுள்களுக்குக் கூறப்பட்ட இலக்கணங்களில் சிறிது திரிந்து வருவனவற்றையும் பெரும்பான்மையவான இலக்கணங்களை நோக்கி அவ்வப் பாக்களின் போலியாய்க் கொள்ளவேண்டும் என்பது. 47
757 வண்ணங்கள் இருபது வகைப்படும்; அவைதாம் பாஅவண்ணம், தாஅவண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல்வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் எனப்படும் என்பது. 48