|
| `நாற்சீர் நாலடி கலிவிருத் தம்மே' | | | - சிறுகாக்கை | | |
| `அளவடி நான்கின கலிவிருத் தம்மே.' | | | - யா. வி. 89 | | |
| `அடிவரைஇன்றி அளவொத் தந்தடி நீண்டிசைப்பின் கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும்; கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது; நேரடி ஈரிண்டாய் விடினது வாகும் விருத்தம்; திருத்தகு மெல்லியலே.' | | | - யா. கா. 34 | | |
| `ஈரடி யாதி எனைத்தடி யானும்வந் தீற்றில்நின்ற ஓரடி நீளின் கலித்தா ழிசை; ஒலி யோர்விருத்தம் நேரடி நான்காய் நிகழுமென்றார்; நெடிலென் றுரைத்த பேரடிநான்கு கலித்துரை யாமென்பர்; பெய்வளையே.' | | | - வீ. சோ. 123 | | |
| `கலித்தா ழிசையே கடையடி மிக்குமற்று அடிஎனைத் தாகியும் அளவுஒத்து ஒவ்வாது ஒருமூன்று அடுக்கியும் ஒன்றுமாய் வருமே.' | | | - தொ. வி. 245 | | |
| `கலித்துறை நெடிலடி நான்குஒத்து அவற்றுள் இடைநேர் வெண்சீர் இயற்சீர் முதல்நான்கு இடைநிரை வெண்சீர் இறுதிச்சீர் மோனையாய்க் கடையே கொண்டுஇறும் கட்டளைக் கலித்துறை.' | | | - 241 | | |
| `விருத்த விகற்பம் வரும்கலி அளவடி' | | | - 248 | | |
| `இரண்டடி யாயீற் றடிநீண் டிசைப்பது கலித்தா ழிசையெனக் கருதப் படுமே.' | | | - மு. வீ. யா. செ. 48 | | |
| `ஒருபொருள் மேல்மூன் றடுக்கி யிரண்டடி யாக வருவஃது அதன்சிறப் பாகும்.' | | | - 49 | | |
| `ஐஞ்சீ ரடிநான் காய்அள வொத்து வருவது கலித்துறை யாம்வழுத் திடினே.' | | | - 50 | | |
| `அளவடி நான்காய் வரல்கலி விருத்தம்.' | | | - 51 | | |
30 |