பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 31

201

 

 வஞ்சிப்பா இலக்கணம்

740. தூங்கல் இசையன வஞ்சி; மற்றவை
ஆய்ந்த தனிச்சொலோடு அகவலின் இறுமே.
 
 

 - சி. செ. கோ. 75

 
இது நிறுத்தமுறையானே வஞ்சிப்பாவிற்கு ஓசையும் ஈறும் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : தூங்கல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடையனவாம் மேற் கூறிய குறள்
அடி வஞ்சிப்பாவும் சிந்து அடி வஞ்சிப்பாவும்; அவ்விருவகை வஞ்சிப்பாவும் ஆராய்ந்த
தனிச் சொல்லோடு புணர்ந்து ஆசிரியச் சுரிதகத்தான் இறும் என்றவாறு.

     மற்ற என்ற மிகையானே ஏந்திசைத் தூங்கலும் அகவல் தூங்கலும் பிரிந்திசைத்
தூங்கலும் எனத் தூங்கல் ஓசை மூன்று வகைப்படும்.
  `ஒன்றிய வஞ்சித் தளையே வரினும்
ஒன்றாத வஞ்சித் தளையே வரினும்
என்றிவை இரண்டும் பிறவும் மயங்கினும்
ஏந்தல் அகவல் பிரிந்திசைத் தூங்கலென்று
ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப'
 
 

 - சி. செ. கோ. 75

 
எனக் கூறுப ஆகலின்.

இவற்றிற்குச் செய்யுள் :

ஏந்திசைத் தூங்கல் :
  `வினைத்திண்பகை விழச்செற்றவன்
வனப்பங்கய மலர்த்தாளிணை
நினைத்தன்பொடு தொழுதேத்துநர்
        நாளும்
மயலாம் நாற்கதி மருவார்;
பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே'
 
 

- யா. கா. 22 மே.

 
எனவும்,