பக்கம் எண் :

202

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

அகவல் தூங்கல் :

  `வானோர்தொழ வண்டாமரைத்
தேனார்மலர் மேல்வந்தருள்
ஆனாஅருள் கூர்அறிவனைக்
           கானார்
மலர்கொண் டேத்தி வணங்குநர்,
பலர்புகழ் முத்தி பெறுகுவர்; விரைந்தேழு
 
 

- யா. கா. 22 மே.

 
எனவும்,

பிரிந்திசைத் தூங்கல் :

  `மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
யெனவாங்கு,
இனிதி னொதுங்கிய விறைவனை
மனம்மொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தேழு
 
 

 - யா. கா. 22 மே.

 
எனவும் முறையே காண்க.

தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இற்ற குறள் அடி
வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் :

  `சுறமறிவன துறையெல்லாம்
இறவீன்பன இல்லெல்லாம்
மீன்திரிவன கிடங்கெல்லாம்
தேன்தாழ்வன பொழிலெல்லாம்
மெனவாங்கு,
தண்பணை தழீஇய இருக்கை
மண்கெழு நெடுமதில் மன்ன னூரேழு
 
 

- யா. கா. 23 மே.

 
எனவும்,

தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இற்ற சிந்தடி
வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் :

  `தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல்
பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி