செய்யுளியல் - நூற்பா எண் 31 | 203 | | | என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச் சொன்னலத்தகைப் பொருள்கருத்தி னிற்சிறந்தாங்கு எனப்பெரிதுங், கலங்கஞ ரெய்தி விடுப்பவுஞ் சிலம்பிடைச் செலவுஞ் சேணிவந் தற்றே' | | | - யா. கா. 23 மே. | | | விளக்கம் | பொதுச்சீர் பதினாறும் வஞ்சிச்சீர் நான்கும் வந்த குறளடி வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் : | | `வையமீன்ற மறைக்கிழவனும் கொய்துழாய்மவுலிக் குணக்கொண்டலும் தருவார்நீழல் தார்வேந்தனும் வரன்முறைதாழ்ந்து வாழ்த்திசைப்ப மைதீர்உணர்வின் மழமுனிவனும் பையரவரசும் பணிந்திறைஞ்ச இமயம்பயந்த இளங்கொடியொடும் தமனியப்பொதுவில் தாண்டவம்புரி தில்லைவாண! நின் திருவடிக்கீழ்ச் சொல்லுவதொன்றிது; சொலக்கேண்மதி; கமலலோசனன் கண்படுக்கும் அமளியைநின்மருங் காதரித்தனை; செங்கேழ்நறுநுதல் திருமகளோடும் அங்கவ னுறைதரும் ஆழிச் சேக்கையைப் புலிக்கால்முனிவரன் புதல்வனுக்கு நலத்தகுகருணையின் நயந்தளித்தனை; அதனால், பாயலும் அமளியும் இன்றி மன்றநின் வாயிலின் நெடுநாள் வைகினன் அணையொடும் அத்திரு மனையவற் களித்தி; நின் மெய்த்தொழில் அன்றே வீடுநல் குவதே.' இப்பாடலில் `அங்கவன் உறைதரும் ஆழிச் சேக்கையை' | | | - சி. செ. கே. 76 | | | என்பது ஆசிரிய அடி. | |
|
|
|