| `வஞ்சிக்கு ஓசை வழங்கும் தூங்கலே; தன்சீர் தன்தளை தவிர்ந்து பிறபெறும் குறளடி சிந்தடி கொண்டு மூவடி குறையா மூன்றனமேல் கூறில் பெருகத் தனிச்சொலும் அகவலும் தழுவலோடு இறுமே.' | | | - தொ. வி. 237 | | |
| `தூங்கல் இசையன வஞ்சி மற்றவை குறளடி சிந்தடி கொடுவரும் எனலே.' | | | - மு. வி. யா. செ. 52 | | |
| `தூங்கல் ஏந்திசை பிரிந்திசை அகவல் ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.' | | | - 55 | | |
| `ஒன்றிய வஞ்சித் தளையான் ஒழுகுவது ஏந்திசைத் தூங்கல் எனப்படும் எனலே.' | | | - 56 | | |
| `ஒன்றாத வஞ்சித் தளையான் வருவது பிரிந்திசைத் தூங்கல் எனப்பெயர் பெறுமே.' | | | - 57 | | |
| `இவ்விரு தளையும் பிறவும் விரவித் தொடருவது அகவல் தூங்கல் எனலே.' | | | - 58 | | |
| `இருசீ ரடிஎனைத் தானும் வந்து தனிச்சொல் பெற்றக வற்சுரி தகத்தால் வருவது குறளடி வஞ்சி ஆகும்.' | | | - 53 | | |
| `சிந்தடி யாகத் தனிச்சொல் பெற்றே அகவல் சுரிதகத் தாலே முடிவது சிந்தடி வஞ்சியாம் செப்புங் காலே.' | | | - 54 | | |
|
31 |
வஞ்சிப்பா இனம் |
741. | குறள்அடி நான்மையின் கோவை மூன்றாய் வருவன வஞ்சித் தாழிசை ஆதலும், ஆங்குஅவை தனிவரின் அதன்துறை ஆதலும், பாங்குஅமை சிந்தடி நான்காய் நடப்பது வஞ்சி விருத்தம் ஆதலும் மரபே. | | | | | |