வஞ்சி விருத்தத்திற்குச் செய்யுள் : |
| `சோலை ஆர்ந்த சுரத்திடைக் காலை ஆர்கழல் ஆர்ப்பவும் மாலை மார்பன் வருமாயின் நீல உண்கணிவள் வாழுமே.' | | | - யா. கா. 25 மே. | | |
எனவும் வரும். | (32) |
விளக்கம் |
குறளடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்தமையால் வஞ்சித்தாழிசை ஆயினதற்குச் செய்யுள் : |
| `பிணியென்று பெயராமே துணிநின்று தவம்செய்வீர்; அணிமன்றல் உமைபாகன் மணிமன்று பணியிரே.' `என்னென்று பெயராமே கன்னின்று தவம்செய்வீர்; நன்மன்றல் உமைபாகன் பொன்மன்று பணியிரே.' `அரிதென்று பெயராமே வரைநின்று தவம்செய்வீர்; உருமன்றல் உமைபாகன் திருமன்று பணியிரே.' | | | - சி. செ. கோ. 78 | | |
குறளடி நான்காய்த் தனித்து வந்தமையாலான வஞ்சித் துறைக்குச் செய்யுள் : |
| பொன்செய் மன்றில்வாழ் கொன்செய் கோலத்தான் மின்செய் தாள்தொழார், என்செய் கிற்பரே?' | | | - சி. செ. கோ. 79 | | |