பக்கம் எண் :

208

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

சிந்தடி நான்காய் வந்தமையால் ஆன வஞ்சிவிருத்தத்திற்குச் செய்யுள்:

  `ஒன்றி னம்பர லோகமே
ஒன்றி னம்பர லோகமே;
சென்று மேவருந் தில்லையே
சென்று மேவருந் தில்லையே.'
 
 

- சி. செ. கோ. 80

 

ஒத்த நூற்பாக்கள்

  `ஒன்றினை நான்மை உடைத்தாய்க் குறளடி
வந்தன வஞ்சித் துறையெனல் ஆகும்.'
 
 

- காக்கை

 
  `குறளடி நான்கிவை கூடின ஆயின்
முறைமையின் அவ்வகை மூன்றிணைந்து ஒன்றி
வருவன வஞ்சித் தாழிசை ஆகும்.'
 
 

- காக்கை

 
  `எஞ்சா இருசீர் நாலடி மூன்றெனில்
வஞ்சித் தாழிசை; தனிவரின் துறையே.'
 
 

- சிறுகாக்கை

 
  `இருசீர் நாலடி மூன்றிணைந்து இறுவது
வஞ்சித் தாழிசை; தனிவரின் துறையே.'
 
 

 - அவிநயம்

 
  `இருசீர் நாலடி மூன்றிணைந்து ஒன்றி
வருவது வஞ்சித் தாழிசை; தனி நின்று
ஒருபொருள் முடிந்தது துறைஎன மொழிப.'
 
 

- மயேச்சுரம்

 
  `குறளடி நான்மையின் கோவை மூன்றாய்
வருவன வஞ்சித் தாழிசை; தனிவரின்
துறைஎன மொழிப, துணிந்திசி னோரே.'
 
 

- யா. வி. 91

 
  `முச்சீர் நாலடி ஒத்தவை வரினே
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே.'
 
 

- சிறுகாக்கை

 
  `தன்சீர் நிலையின் தளைதம தழீஇய
இன்பா என்ப இயல்புணர்ந் தோரே
ஏனவை விரவின் இடைஎனப் படுமே
தானிடை இல்லது கடைஎனப் படுமே.'
 
 

- மயேச்சுரம்