செய்யுளியல் - முன்னுரை | 21 | | | | 758 | புனைந்துரை ஆவது பெரிதினைச் சுருக்குதலும், சிறிதினைப் பெருக்குதலும் என இருவகைப்படும் என்பது. | 49 | | 759 | நிலைபெற்ற பொருளுக்கு அழிவினைப் பயப்பது ஆராயத்தகாத ஆனந்தம் ஆகும்; அஃது இயற்பெயர்பால் அளபு எடுத்துக் கூறும் பொருத்தம் இல்லாத எழுத்து ஆனந்தம், அவ்வியற்பெயர்பால் மங்கலம் ஒழிந்த தொழிற் சொல்லைச் செப்பும் சொல் ஆனந்தம் என இருவகைப்படும்; இவ்விருவகை ஆனந்தமும் ஏற்படாமல் செய்யுள் இயற்றுக என்பது. | 50 | | 760 | செய்யுள் முற்கூறிய வரையறையைக் கடந்து ஓர் அடியானும் பல அடியானும் வரையப்படும். அங்ஙனம் வரையப்படுவன பாட்டுரை, நூல், மந்திரம், பிசி, முதுசொல், அங்கதம், வாழ்த்து என்ற எழு வகையும் பிறவுமாம் என்பது. | 51 | | | | | |
|
|
|