பக்கம் எண் :

210

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
நிறுத்த முறையானே எழுத்து முதலிய அறுவகை உறுப்பு இலக்கணமும், பாவும்
பாஇனமும் ஆகிய இருவகைச் செய்யுள் இலக்கணமும் உணர்த்தி, அவற்றின் ஒழிபு
இலக்கணம் உணர்த்துவான் புகுந்தவற்றுள் இஃது ஒரு சார் எழுத்துக்கட்கு ஆவது ஓர்
இலக்கணம் கூறுகின்றது.

     இ-ள் : தளையும் சீரும் ஓசையும் மேற்கூறிய இலக்கணத்தொடு மாறுகொள்ள
வருவழிக் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் உயிரளபெடையும் அலகு காரியம்
பெறாமையும்,

     ஐகாரம் குறுகிய இடத்துக் குற்றெழுத்தே போலக் கொண்டு அலகிடப்படுதலும்,

     ஆய்தமும் ஒற்றும் அளபு எடுத்து நிற்புழி ஓர் அலகு பெறும் தன்மைய ஆதலும்,

     ஒற்றுக்கள் அளபு எழாவழி முற்கூறிய அலகு பெறாமையும் இலக்கணம் என்று
கூறுவர் கற்றோர் என்றவாறு.

     `ஒற்று அளபு எழாவழிப் பெற்ற அலகு இல' எனவே அவ்வொற்றின்பாற்படும்
ஆய்தமும் அளபு எழாவழி அலகு பெறாமையும் பெற்றாம்.
  நிரை நிரை நேர் நிரை
`குழ,லினி தியா,ழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்'
 
 

- குறள் 66

 
எனவும்,
  நிரைநேர்நேர் நேர் நிரை
`அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்'
 
 

 - குறள் 254

 
எனவும் வரும்.