பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 33

213

 

 

`செப்பல் இசையன வெண்பா'  
 

- இ. வி. செ. 19

 
என்னும் இலக்கணத்தோடு மாறுகொண்டு செப்பல் ஓசை அழியநிற்கும் ஆகலின்,
ஆண்டு உயிர்அளபெடைகளை இவ்விலக்கணத்தான் அலகுபெறா என்று களைய
வண்ணம் சிதையாதாம்.

     `இயல்' என்ற மிகையானே அலகிடும் இடத்துக் குற்றியலிகரக் குற்றியலுகரங்கள்
ஒற்று இயல்பினவாயும், உயிர் அளபெடை நெட்டெழுத்து இயல்பிற்றாயும் நிற்றல்
கொள்க.

     இனி `எதிர் மறுத்தல்' என்னும் இலக்கணத்தான் சீரும் தளையும் திருந்தின்
அலகுபெறும் என்பதாயிற்று. அங்ஙனம் அலகு பெறும் இடத்துத் `தளைசீர் வண்ணம்'
என முறை பிறழக்கூறிய அதனால் குற்றுகரக் குற்றிக ரங்கள் குற்றெழுத்தின் பயத்தவாய்
அலகு பெறும் எனக் கொள்க.

உயிரளபெடை அலகு பெறுமாறு மேல் பெறப்படும். குற்றிகரக்
குற்றுகரங்கள் குற்றெழுத்தின் பயத்தவாய் அலகு பெறுமாறு:

 

நேர்நிரை
`வந்,துநீ, சேரின் உயிர்வாழும்; வாராக்கால்
நேர் நிரை
முந்,தியாய் பெய்த வளைகழலும்; -- முந்தியாம்
கோளானே கண்டனம்; கோல்குறி யாய்!இன்னும்ஓர்
நாளானே நாம்புணரு மாறு'
 
 

 - யா. கா. 38 மே.

 
இதனுள் வந்துநீ என்புழியும் முந்தியாயஎன்புழியும் காண்க.

 

`நடைக் குதிரை ஏறி, நறுந்தார் வழுதி
நிரை நேர் நேர்
அடைப்,பை,யாய், கோறா எனலும், - அடைப்பையான்