214 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | சுள்ளல் சிறுகோல் கொடுத்தான்; தனைப்பெறினும் செல்லா தியாங்காண் டலை' | | - யா. கா. 38 மே. | | எனவும், | | நேர் நிரை நேர் `கெண், டையை, யே வென்ற கிளரொளி உண்கணாள் நேர் நிரை நேர் பண், டைய, ளே அல்லள் படி' | | - யா. கா. 38 மே. | | எனவும், | | நேர் நிரை நேர் `அன்,னையை,யான், நோவ தெவன்?மாண் அணியிழாய்! நேர் நிரை நேர் புன்,னையை,யான் நோவன் புலந்து' | | - யா. கா. 38 மே. | | எனவும் வரும் இவற்றுள் ஐகாரக்குறுக்கம் குற்றெழுத்தே போல நின்று குறிலோடும் நெடிலோடும் கூடி நிரைஅசை ஆயினவாறு காண்க. | | நேர் நேர் `எஃ,ஃ, கிலங்கிய கையராய், இன்னுயிர் நேர் நேர்நேர் வெஃ,ஃ, கு வார்க்கில்லை வீடு' | | - யா. கா. 38 மே. | | எனவும், | | நேர் நேர் `கண்,ண் கருவிளை, கார்முல்லை கூரெயிறு, பொன்,ன் பொறிசுணங்கு, போழ்வாய் இலவம்பூ, மின்,ன், நுழைமருங்குல், மேதகு சாயலாள், என்,ன்? பிறமகளா மாறு' | | - யா. கா. 38 மே. | | எனவும் ஆய்தமும் ஒற்றும் அளபு எழுந்து ஓர் அலகு பெற்றவாறு காண்க. | | `உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச் சிற்றம் பலத்தொருத்தன் குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாயிக் கொடி யிடைதோள் | | | | | |
|
|