பக்கம் எண் :

218

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர்
`அ,அவ,னும் இ,இவ,னும் உ,உவ,னும் கூடியக்கால்
நேர் நிரை நேர்
எ, எவ, னை வெல்வார் இகல்?`
 
 

- யா. கா. 39 மே.

 
எனச் சுட்டின்கண்ணும் வினாவின்கண்ணும் விட்டு இசைத்துவந்த குற்றெழுத்துக்களும்
அன்ன.

     விட்டு இசையாதவழி மொழிமுதற்கண் தனிக்குறில் குறிலோடும் நெடிலோடும் கூடி
நிரை அசையாம் என்பதாயிற்று.

 

நிரை நேர்
`யர, ல வழள இடையினமாம் ஏனை
மரபு பிழையாத வைப்புழு
 
 

- யா. வி. 7 மே.

 
எனவும்,

 

நிரை நேர் நேர்
`அம,ருந்,து, தானை அதியர்தம் கோவே
நிரை நேர் நேர்
தும, ருந், து தூயனவே கொண்டுழு
   

- யா. வி. 7 மே.

 
எனவும் வரும். இவற்றுள் தற்சுட்டின் கண்ணும் ஏவற்கண்ணும் குற்றெழுத்தினோடு கூடி
நிரை அசை ஆயினவாறு காண்
[து - உண் - இது ஏவல்]

இனி நெட்டெழுத்து அளபு எழின் நேர் நேர் ஆதற்கும் குறில்நெடில்
அளபுஎழின் நிரைநேர் ஆதற்கும் செய்யுள் :

 

நேர் நேர் நிரை நேர் நேர்
`ஏ,ஏர் சிதைய அழாஅல்; எலா,அ,நின்,
சேயரி சிந்தின கண்ழு
 
 

- யா. கா. 39 மே.

 
எனவரும்.
     உரையின் கோடலான் பின்பு நின்ற குற்றெழுத்தினோடு கூடி நிரை அசை ஆகாது
எனக்கொள்க.