பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 34

219

 

 

`தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்றே'
`இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்றே'
 
     
என்றார் பிறரும் எனக் கொள்க. இன்னும் அதனானே

 

நே நே நே
`தூ,உ,உ,த் தீம்புகைத் தொல்விசும்பு போர்த்தது கொல்'
 
 

- மலைபடு, இறுதி வெண்பா

 

 

நிரை நேர் நேர்
`இலா,அ,அர்,க் கில்லை தமர்'
 
 

 - நாலடி 283

 

 

நிரை நேர் நேர்
`செறா,அ,அய் வாழி என் நெஞ்சு'
 
 

 - குறள் 1200

 
எனவும் சிறுபான்மை நேர் நேர் நேர் ஆதலும், நிரை நேர்நேர் ஆதலும் கொள்க. (34)

ஒத்த நூற்பாக்கள்

 

`தற்சுட்டு ஏவல் குறிப்புஇவை அவ்வழி
முற்றுத் தனிக்குறில் முதலசை ஆகா.'
 
 

- பல்காயம்

 

 

`ஏவல் குறிப்பே தற்சுட்டு அல்வழி
யாவையும் தனிக்குறில் முதலசை ஆகா;
சுட்டினும் வினாவினும் உயிர்வரு காலை
ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே.'
 
 

- மயேச்சுரம்

 

 

`ஒற்றின் றாகியும் குறிப்பே ஏவல்
தற்சுட்டு அல்வழி முதல்தனி நேராம்.'
`குறிப்பே ஏவல் தற்சுட்டு அல்வழி
தனிக்குறில் மொழிமுதல் தனியசை இலவே.'
 
 

 - யா. வி. 7

 

 

`விட்டிசைத் தல்லால் முதற்கண் தனிக்குறில் நேரசையென்று
ஒட்டப் படாததற் குண்ணான் உதாரணம்; ஓசைகுன்றா
நெட்டள பாய்விடின் நேர்நேர்; நிரையொடு நேரசையாம்
இட்டத்தி னாற்குறில் சேரின்; இலக்கியம் ஏர்சிதைவே.'
 
 

- யா. கா. 93