பக்கம் எண் :

   
 

செய்யுளியல் நூற்பாக்கள்

     இவ்வாசிரியர் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் அமைந்துள்ள பிற
யாப்பிலக்கண நூற்பாக்கள் பலவற்றைத் தம் செய்யுளியல் நூற்பாக்களாகக் கொண்டு,
தாமேயும் சில நூற்பாக்களைத் தெளிவும் சிறப்பும் கருதி யாத்துள்ளார். அவற்றை ஈண்டு
நோக்குவோம்.

     இவ்வாசிரியர் முழுதும் கொண்டனவும் சிறிது திரித்துக் கொண்டனவும் ஆகிய
யாப்பருங்கல நூற்பாக்கள்:

5

நெடிலும் குறிலும் தனித்தும்ஒற்று அடுத்தும்
நடைபெறும் நேர்அசை நான்கும்; நீங்காக்
குறில்இணை குறில்நெடில் தனித்தும்ஒற்று அடுத்தும்
நெறிவரு நிரைஅசை நான்கும் ஆகும்.
 
 

 - யாப். 6, 8

 

6

இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்று
மயக்குஅற வகுத்த சீர்மூன்று ஆகும்.
 
 

- யாப். 10

 

7

ஈர்அசை கூடிய சீர்இயற் சீர்;அஃது
ஈரிரண்டு ஆம்.
 
 

- யாப். 11

 
  மூஅசை கூடிய சீர்உரிச் சீர்;அது
நாலிரண்டு ஆகி நடைபெறும்; அவற்றுள்
நேர்இறு நான்கும் வெள்ளை; அல்லன
பாவினுள் வஞ்சியின் பாற்பட்டிடுதலும்
 
 

- யாப். 12
 - காக்கைபாடினியம்