220 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | `விட்டிசைத் தல்லா விடின்முதல் தனிக்குறில் நேரசை ஆகா தென்மனார் புலவர்.ழு | | | - மு. வீ. யா. ஒ. 4 | | | | `முதல்நிலை அளபெடை நேர்நே ராங்கடை நிலையள பெடைநிரை நேரா கும்மே.ழு | | | - 5 | | | 34 | சீர்தளைகட்கு ஆவதோரிலக்கணம் | 744. | நிரைநடு ஆகிய வஞ்சி உரிச்சீர் கலியினொடு அகவலின் கடிதலும், கலிவயின் நேர்ஈற்று இயற்சீர் நிலவுதல் இன்மையும், ஏனைய எல்லாம் எவ்வகைச் சீரொடும் தாம்மயங் குதலும், தளையொடு மயங்கலும், வெள்ளையுள் நிரைஈற்று உரிச்சீர் விரவா சொல்லிய வெள்ளையுள் பிறதளை தொடரா என்றலும், ஒன்றிய இலக்கணம் என்ப. | | | - 5 | | | இ-ள் : நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் இரண்டும் கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும் வாரா என வரைதலும், நேர்நேரும் நிரைநேரும் ஆகிய நேர் ஈற்று இயற்சீர் இரண்டும் கலிப்பாவினுள் வருதல் இன்மையும், ஒழிந்தசீர் எல்லாம் எவ்வகைப்பட்ட சீரோடும் விரவி எல்லாப் பாவினுள்ளும் பாஇனத்துள்ளும் வருதலும், தத்தம் தளையோடு பிறதளை விரவி எல்லாப் பாவினுள்ளும் பா இனத்துள்ளும் வருதலும், | | |
|
|