பக்கம் எண் :

222

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

விளக்கம்

`காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்ழு என்ற குறிஞ்சிக் கலியுள் `காமர்ழு என்ற
மாஞ்சீர் வந்தது. `திரைந்து திரைந்து திரைவரத்திரள் முத்தங்கரை வாங்கிழு என்னும்
கொச்சகக் கலியுள் சிறுநுளைச்சியர் என நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வந்தது.
[யாப் - 16 - உரை]

ஒத்த நூற்பாக்கள்

 

`விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி
மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே.ழு
 
 

 - யா. வி. 15

 

 

`நிரைநடு வியலா வஞ்சி உரிச்சீர்
கலியினோ டகவலில் கடிவரை இலவே.ழு
 
 

- யா. வி. 16

 

 

`நாலசைச்சீர் வெண்பாவில் நண்ணா அயற்பாவில்
நாலசைச்சீர் நேரீற்று நாலிரண்டாம் - நாலசைச்சீர்
ஈறுநிரை சேரின் இருநான்கும் வஞ்சிக்கே
கூறினார் தொல்லோர் குறித்து.ழு

`இயற்சீர் உரிச்சீர் எனுமிரு சீரும்
மயக்கம் உண்மையின் நால்வகைப் பாவும்
இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும்.ழு
 
 

 - காக்கை

 

 

`உரிச்சீர் விரவ லாயும் இயற்சீர்
நடக்குந ஆசிரி யத்தொடு வெள்ளை
அந்தந் தனியா இயற்சீர் கலியொடு
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே.ழு

`நாலசை யானடை பெற்றன வஞ்சியும்
ஈரொன்று இணைதலும், ஏனுழி ஒன்றுசென்று
அந்தம் இணையசை வந்தன கூறிய
வஞ்சிக் குரைத்தன ஆதலும்,
ஆகுந என்ப, அறிந்திசி னோரே.ழு

`இணைநடு இயலா வஞ்சி உரிச்சீர்
இணையுள ஆசிரி யத்தன ஆகா.ழு
 
 

- காக்கை