| `நடுநேர் இயலா வஞ்சி உரிச்சீர் உரிமை உடைய ஆசிரியத் துள்ளே.' | | | - சிறுகாக்கை | | |
| `நேரீற்று இயற்சீர் கலிவயின் இலவே வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே.' | | | - நற்றத்தம் | | |
| `ஓசையின் ஒன்றி வரினும்வெண் சீரும் ஆசிரிய அடியின் குறுகும் என்ப.' | | | - பல்காயம் | | |
| `அதனுள் தன்சீர் வெண்சீர் ஒருங்கு புகலின் கலியுள் பொருந்தும் என்ப.' | | | - பல்காயம் | | |
| `வஞ்சியுள் ஆயின் எஞ்சுதல் இலவே.' | | | - பல்காயம் | | |
| `இயற்சீர் இறுதி நேர்உற்ற காலை வஞ்சி யுள்ளும் வந்த தாகா ஆயினும் ஒரோவிடத்து ஆகும் என்ப.' | | | - பல்காயம் | | |
| `கலித்தளை அடிவயின் நேர்ஈற்று இயற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே.' | | | - தொ. பொ. 337 | | |
| `வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா.' | | | - 338 | | |
| `உரிமையின் இயற்சீர் மயங்கியும் பாநான்கு இருமை வேறியல் வெண்பா ஆகியும் வருமெனும் வஞ்சிக் கலியின்நே ரீற்ற இயற்சீர் ஆகா என்மனார் புலவர்.' | | | - அவிநயம் | | |
| `நிரைஇறு நாலசை வஞ்சியுள் அல்லால் விரவினும் நேர்ஈற்று அல்லவை நில்லா.' | | | - அவிநயம் | | |
| நேர்நடு இயலா வஞ்சி உரிச்சீர் ஆசிரி யத்தியல் உண்மையும் உடைய.' | | | - அவிநயம் | | |
| `நேர்ஈற்று இயற்சீர் கலிவயின் நேரா நிரையின் நின்ற நாலசை எல்லாம் வரைதல் வேண்டும் வஞ்சியின் வழியே.' | | | - மயேச்சுரம் | | |
| `நிரைநடு இயலா வஞ்சி உரிச்சீர் வரைதல் வேண்டும் ஆசிரிய மருங்கின்.' | | | - மயேச்சுரம் | | |