224 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | `மாஞ்சீர் கலியுள் புகா,கலிப் பாவின் விளங்கனிவந்து ஆஞ்சீர் அடையா,அகவ லகத்தும்,அல் லாதவெல்லாம் தாஞ்சீர் மயங்கும், தளையுமதே, வெள்ளைத் தன்மைகுன்றிப் போம்சீர் கனிபுகின், புல்லா தயற்றளை; பூங்கொடியே.' | | | - யா. கா. 40 | | | `மாஞ்சீர் கலியுள் வரப்பெறா என்ப.' | - | மு. வி. யா. ஒ. 6 | `விளங்கனி கலிப்பா வினுட்புகா எனலே.' | - | மு. வி. யா. ஒ. 7 | `அகவ லிடத்தும் அடையப் பெறாவே.' | - | மு. வி. யா. ஒ. 8 | `இவை நீங்கியசீர் எல்லாம் மயங்கும்.' | - | மு. வி. யா. ஒ. 9 | `எல்லாத் தளைகளும் இவற்றோ ரற்றே.' | - | மு. வி. யா. ஒ. 10 | `வெண்பாவில் வஞ்சி விரவப் பெறாவே.' | - | மு. வி. யா. ஒ. 11 | `வெண்பா அயற்றளை விரும்பா தொழுகும்.' | - | மு. வி. யா. ஒ. 12 | | அடி மயக்கம் | 745. | இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடிஇவை மயக்கப் படுதலும், வெண்சீர் வெள்ளடி கலிஅடி ஒரோவழி அகவலுள் கலத்தலும், வெள்ளடி அகவல் கலியுளும், அகவலும் கலியும் ஒரோவழி வெண்பா அடியும் வஞ்சியுள் மயங்கி வருதலும், ஐஞ்சீர் அடிகலி அகவலொடு அருகிவந்து அடுத்தலும், கடிநிலை இன்றே கருதுங் காலை. | | | | | | இது நிறுத்தமுறையானே அடி மயங்குமாறு கூறுகின்றது. இ-ள் : ஆசிரியப்பாவினுள் இயற்சீர் வெண்டளையான்வந்த வெண்பா அடியும் வஞ்சி அடியும் வந்து மயங்குதலும், அவ்விருவகை அடியுமே அன்றி வெண்சீர் வெண்டளையான்வந்த வெண்பா அடியும் கலி அடியும் ஒரோவழிவந்து மயங்குதலும், | | |
|
|