| மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன்நீங்கச் சேயுயர் வெற்பனும் புகுந்தனன்; போதெழில் உண்கண் பொலிகமா இனியே.ழு | | | [கலி - குறிஞ் - 3] | | |
இக்கலியுள் ஆசிரிய அடியும் வெண்பா அடியும் பலவாக அமைந்துள்ளன. |
ஒத்த நூற்பாக்கள் |
| `இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்கவும் பெறுமே.ழு | | | - தொ. பொ. 374 | | |
| `வஞ்சி விரவல் ஆசிரியம் உடைத்தே; வெண்பா விரவினும் கடிவரை இன்றே.ழு | | | - பல்காயம் | | |
| `அகத்திணை அல்வழி ஆங்கதன் மருங்கின் வகுத்தன சொற்சீர் வஞ்சியொடு மயங்கும்.ழு `இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடிஇவை அகப்பட வரூஉம் அகவலும் உளவே.ழு | | | - யா. வி. 29 | | |
| `வஞ்சி விரவினும் ஆசிரியம் உரித்தே வெண்பா விரவினும் கடிவரை இன்றே.ழு | | | - நத்தத்தம் | | |
| `வெள்ளடி கலியினுள் விரவவும் பெறுமே.ழு | | | - யா. வி. 30 | | |
| `அகத்திணை மருங்கின் அளவு மயங்கி விதப்ப மற்றவை வேறா வேண்டி வஞ்சி அடியின் யாத்திலர், வஞ்சி அகத்திணை மருங்கின் அணையு மாறே.ழு | | | - பன்னிருபடலம் | | |
| `அகத்திணை அகவயின் நிற்ப வஞ்சி சிறப்பில எனினும் சிலவிடத் துளவேழு | | | - மாபுராணம் | | |
| `அகப்பா அகவலுள் வஞ்சி,சொற் சீரடி,ஆயிரண்டும் புகப்பாலனவல்ல என்பதொல் லோர்கள்; புகரில்வஞ்சி அகப்பாப் பொருளணையா என்பர், நாவலர், ஆங்குஅருகிப் புகப்பான் மையுமொரு சார்புல வாணர் புகன்றனரே.ழு | | | - நாலடி நாற்பது | | |