பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 36

231

 

 

`ஆசிரியப் பாவில் அயற்பா அடிமயங்கும்,
ஆசிரியம் வெண்பாக் கலிக்கணாம், - ஆசிரியம்
வெண்பாக்கலி விரவும் வஞ்சிக்கண், வெண்பாவில்
ஒண்பா அடிவிரவா உற்று.'
 
 

 - நாலடி நாற்பது

 

 

`சீர்வண்ணம் வெள்ளைக் கலிவிரவும், வஞ்சியுள்
ஊரும் கலிப்பா சிறுச்சிறிதே, - பாவினுள்
வெண்பா ஒழித்துத் தளைவிரவும், செய்யுளாம்
வெண்பா கலியுள் புகும்.'
 
 

 - நாலடி நாற்பது

 

 

`வஞ்சியுள் அகவல் மயங்கினும் வரையார்.'  
 

- யா. வி. 31

 

 

`வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும்
ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப.'
 
 

- தொ. பொ. 375

 

 

`ஐஞ்சீர் அடுத்தலும் மண்டிலம் ஆகலும்
வெண்பா யாப்பிற் குரிய அல்ல.'

`இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளான்
மயக்கப் படா வல்ல; வஞ்சி மருங்கின் எஞ்சா அகவல்
கயற்கணல் லாய்; கலிப் பாதமும் நண்ணும்; கலியினுள்ளான்
முயக்கப் படும்முதல் காலிரு பாவும், முறைமையினே.'
 
 

- யா. கா. 41

 

 

`இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம்
அகற் பாவினுள் அடையப் பெறுமே.'
 
 

- மு. வீ. யா. ஒ. 13

 

 

`வஞ்சியுள் அகவல் அடிகலி அடியும்
விரவி வரப்பெறும், விளம்புங் காலே.'
 
 

- 14

 

 

`கலியினு மகவ லினுமைஞ் சீரடி
வருவதும் உளவௌ வகுத்தனர் புலவர்.'
 
 

- 15

 

36