பக்கம் எண் :

234

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

பாக்களுக்கு அடிவரையறை

  நல்வயல் கழனி ஊரன்
புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே.'
 
     
எனவும்,

நான்கு அடியான் வந்த கலிப்பாவிற்குச் செய்யுள் :

 

`செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீள் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.'
 
 

- யா. கா. 15 மே.

 
எனவும் வரும்.

     வாளா ஆசிரியம் என்னாது ஆசிரியத்தோடு எனப்பிரித்து ஓதியமையான்,
ஆசிரியம் சுரிதகமாய் வரும் இடத்து இரண்டு அடியானும் வரும் என்றும்,

     வஞ்சியை முற்கூறினமையான் வஞ்சிப்பா இரண்டு அடியானும் வரும் என்றும்
காண்க.

இரண்டு அடியாய்ச் சுருங்கி வந்த வஞ்சிக்குச் செய்யுள் :

 

`பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி
வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்;
அதனால்,
அறிவன தடியிணை பரவப்
பெறுகுவர் யாவரும் பிறவா நெறியே.'
 
 

 - யா. கா. 14 மே.

 
என வரும். ஏனைப் பெருமைக்குச் செய்யுள் வந்துழிக் காண்க.  (37)

ஒத்த நூற்பாக்கள்

 

`ஒருதொடை ஈரடி வெண்பாச் சிறுமை;
இருதொடை மூன்றாம் அடியின் இழிந்து
வருவன ஆசிரியம் இல்லென மொழிப;
வஞ்சியும் அப்பா வழக்கின வாகும்.'
 
 

 - காக்கை