பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 37

235

 

 

`நான்காம் அடியினும் மூன்றாந் தொடையினும்
தாழ்ந்து கலிப்பாத் தழுவுத லிலவே.'
 
 

- காக்கை

 

 

`உரைப்போர் குறிப்பினை அன்றிப் பெருமை
வரைத்தித் துணையென வைத்துரை இல்லென்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசி னோரே.'
 
 

- காக்கை

 

 

`ஒன்றும் இரண்டும் மூன்றும்ஓர் இரண்டும்
என்றிம் முறையே பாவின் சிறுமை;
தங்குறிப் பினவே தொடையின் பெருமை.'
 
 

- அவிநயம்

 

 

`ஆசிரியப் பாவின் சிறுமைக் கெல்லை
மூவடி ஆகும் பெருமை ஆயிரம்,
ஈரடி முதலா ஒன்றுதலை சிறந்து
ஏழடி காறும் வெண்பாட் டுரிய,
வாயுறை வாழ்த்தே செவியறி வுறூஉவே
கைக்கிளை மயக்கம கலிவெண் பாட்டே
தத்தம் குறிப்பின அளவென மொழிப.'
 
 

- நத்தத்தம்

 

 

`ஏழடி இறுதி ஈரடி முதலா
ஏறிய வெள்ளைக் கியைந்தன அடியே,
மிக்கடி வருவது செய்யுள்கட் குரித்தே,
மூவடிச் சிறுமை ஆயிரம் ஆகும்
ஆசிரி யத்தின் பெருமை அளவே.'
 
 

- சங்கயாப்பு

 

 

`ஆயிரம் இறுதி மூவடி இழிபா
ஆசிரியப் பாட்டின் அடித்தொகை அறிப;
ஈரடி முதலா ஏழடி காறும்
திரிபில வெள்ளைக்கு அடித்தொகை தானே.'
 
 

- பல்காயம்

 

 

ஐயிரு நூறடி ஆசிரியம் வஞ்சிச்
செய்யுள் நடப்பினும் சிறப்புடைத் தென்ப.'
 
 

- மயேச்சுரம்

 

 

`பேணும் பொருள்முடிபே பெருமைக் கெல்லை
காணுங் காலை, கலியலங் கடையே.'
 
 

- மயேச்சுரம்

 

 

`கலியுறுப்பு எல்லாம் கட்டளை உடைமையின்
நெறியின் முறைவழி நிறுத்தல் வேண்டும்.'
 
 

- மயேச்சுரம்