| `அகவற்கு ஒருமூன்று அடிச்சிறு மையே.' | | | - மு. வீ. யா. ஒ. 20 | | |
| `வஞ்சிப் பாவும் அவற்றோ ரற்றே.' | | | - 21 | | |
| `கலிப்பா விற்கொரு நாலடி சிறுமை ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.' | | | - 22 | | |
| `பெருமை உரைப்போன் பெற்றித்து ஆகும்.' | | | - 23 | | |
37 |
கலி உறுப்புக்களுக்கு அடி வரையறை |
747. | வண்ணகம் அம்போ தரங்க ஒத்தாழிசை நண்ணிய தரவின் அடிஇரு மூன்றும், ஏனைய தரவுஅடி இழிபுஇரு மூன்றும், பேணிய பெருமை பெரும்பொருள் முடிபும், இரண்டுஅடி இழிபும் இரட்டிமூன்று ஆக்கமும் ஒன்றிய தாழிசை உறுதலும், உறுங்கால் தரவில் சுருங்கல் தகுதிஎன்று உரைத்தலும், அளவடி முதலா அனைத்துஅடி யானும் வருவது வண்ணகம், வருங்கால் சிறுமை நாலடி பெருமை நாலிரண்டு ஆகி நடத்தலும், நெறியென நாட்டினர் புலவர். | | | | | |
இது கலி உறுப்பாகிய தரவு தாழிசைகட்கு அடி வரையறையும் அராகத்திற்குச் சீர் வரையறையும் அடி வரையறையும் கூறுகின்றது. இ-ள் : வண்ணக ஒத்தாழிசைக் கலியும், அம்போதரங்க ஒத்தாழிசைக்கலியும் பொருந்திய தரவுஉறுப்பிற்குப் பெருக்கச் சுருக்கம் இன்றி அடிவரையறை ஆறும், ஒழிந்த கலிப்பாவின் தரவுஅடிக்கு வரையறைச் சுருக்கம் மூன்றும் பெருக்கம் பொருள் முடிவும், |