238 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | தாழிசைக்கு வரையறை சிறுமை இரண்டுஅடியும் பெருமை நான்கு அடியும் மூன்று அடியும் பொருந்துதலும், பொருந்தும் இடத்து முன்னர் நின்ற தரவு அடியின் தாழிசை அடி சுருங்கி வருதல் இயல்பு என்று சொல்லுதலும், வண்ணக உறுப்பு அளவடியானும் நெடிலடியானும் கழிநெடிலடியானும் வரப்பெறும்; அப்படி வருங்கால் அராக அடிக்கு வரையறை சிற்றெல்லை நான்கும் பேரெல்லை எட்டுமாய் நடத்தலும் - இலக்கணமாக அமைத்தனர் அறிவுடையோர் என்றவாறு. அராகம் எனினும் வண்ணகம் எனினும் ஒக்கும். வண்ணக உறுப்பிற்குச் சீர் விதந்து ஓதினமையின் ஓதாத தரவு தாழிசைகட்குச் சீர் வரையறை பொது வகையான் கலிக்கு ஓதிய அளவடியே கொள்க. ஈண்டு ஓதாத அம்போதரங்க உறுப்பிற்குச் சீர் வரையறையும் எல்லை வரையறையும் அவ்வுறுப்புடைக் கலிக்கு ஓதிய விதியானே பெற்றாம். எனவே, தனிச்சொல் உறுப்பு எவ்வகைச் சீரானும் வரப்பெறும் என்பதூஉம், சொல் என்றமையான் எல்லை இன்று என்பதூஉம், ஏனை இருவகைச் சுரிதக உறுப்பிற்குச் சீர் வரையறையும் எல்லை வரையறையும் தத்தம் விதியானே வரப்பெறும் என்பதூஉம் பெறப்பட்டன. | | `ஏனைய தரவுஅடி இழிபு ஒருமூன்று' | | | | | | என்றாரேனும் தரவுகொச்சகம் சிறுமை நான்கு அடியானே வரும்; | | |
|
|