உயிரும் யரலழ என்னும் ஒற்றுக்களிடையே ஆசிட்டும் இடையிட்டும் இரண்டடியும் மூன்றாம் எழுத்துத் தம்முள் ஒன்றிவரினும் எதுகை ஆதலும், முரண் தொடைக்கும் கடை முரணும் கடை இணை முரணும் பின் முரணும் கடைக்கூழை முரணும் இடைப்புணர் முரணும் பொருந்துதலும் பொருந்தும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. முரண்தொடை என்னும் இரணத்தொடை எனினும் ஒக்கும். |
வருக்க எதுகைக்குச் செய்யுள் : |
[டகர வருக்கம்] |
| `நீடிணர்க் கொம்பர்க் குயிலாலத் தாதூதிப் பாடும்வண் டஞ்சி அகலும் பருவத்துத் தோடார் தொடிநெகிழ்த்தார் உள்ளார்; படலொல்லா பாடமை சேக்கையுள் கண்' | | | - யா. கா. 43 மே. | | |
எனவும், |
வருக்க மோனைக்குச் செய்யுள் : |
[பகர வருக்கம்] |
|
| `பகலே, பல்பூங் கானல் கிள்ளை ஓப்பியும், பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇப் பின்னுப்பிணி அவிழ்ந்த நன்னெடுங் கூந்தல் பீர்ங்கப் பெய்து, தேம்படத் திருகிப் புனையீ ரோதி செய்குறி நசைஇப், பூந்தார் மார்ப! புனத்துள் தோன்றப் பெருவரை அடுக்கத் தொருவே லேந்தி, பேயு மறியா மாவழங்கு பெருங்காட்டுப் பைங்கண் உழுவைப் படுபகை வெரீஇப் பொங்குசினம் தணியாப் பூநுதல் ஒருத்தல் | | | | | |