இடையின எதுகைக்குச் செய்யுள் : |
| `எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு' | | | - குறள் 299 | | |
எனவும் வரும். [லகர ஒற்றும் யகர ஒற்றும்] |
இனமோனையும் மூன்று வகைப்படும்; வல்லின மோனையும் மெல்லின மோனையும் இடையின மோனையும் என. அவற்றுள் வல்லின மோனைக்குச் செய்யுள் : |
| `கயலேர் உண்கண் கலுழ, நாளும் சுடர்புரை திருநுதல் பசலை பாயத் திருந்திழை அமைத்தோள் அரும்படர் உழப்பப் போகல்; வாழியர் ஐய! பூத்த கொழுங்கொடி அணிமலர் தயங்கப் பெருந்தண் வாடை வரூஉம் பொழுதே' | | | - யா. கா. 43 மே. | | |
என வரும். [க-ச-த-ப-மோனை] |
மெல்லின மோனையும் இடையின மோனையும் வந்துழிக் கண்டு கொள்க. [யா. வி. 37 உரை] |
உயிரெதுகைக்குச் செய்யுள் : |
| `துளியொடு மயங்கிய தூங்கிருள் நடுநாள், அணிகிளர் தாரோய்! அருஞ்சுரம் நீந்தி, வடிவமை எஃகம் வலவயின் ஏந்தித் தனியே வருதி, நீஎனின், மைஇருங் கூந்தல் உய்தலோ அரிதே' | | | - யா. கா. 43 மே. | | |
எனவும் [இகர உயிர்] |
யகர ஆசிடை எதுகைக்குச் செய்யுள் : |
| `காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் எற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி, வருக்கை போழ்ந்து, தேமாங் கனிசிதறி, வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே' | | | - சிந்தா 31 | | |
எனவும், |