37 | ஈர்அடி வெண்பாச் சிறுமை மூவடி ஆசிரி யத்தொடு வஞ்சியும் எஞ்சியது ஒருநான்கு ஆகும் இழிபே. | | | - யாப். 32 | | |
41 | ஒழுகிய ஓசையின் ஒத்துஅடி இரண்டாய் விழுமிய பொருள்படும் வெண்செந் துறையும். | | | - யாப். 63 | | |
| அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும் சந்தழி குறளுமாம் தாழிசைக் குறளும். | | | - யாப். 64 | | |
42 | அடிமுதல் பொருள்உற வருவது கூன்; அஃது இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப. | | | - யாப். 94 | | |
| மிகப் பழைய நூற்பாக்களாய் இவ்வாசிரியரால் கொள்ளப்பட்டவை பின்வருமாறு. | | | | | |
பழைய நூற்பாக்கள் |
|
|
|
2 | எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத்து அசைத்துஇசை கோடலின் அசையே; அசைஇயைந்து சீர்கொள நிற்றலின் சீரே; சீர் இரண்டு தட்டு நிற்றலின் தளையே; அத்தளை அடுத்து நடத்தலின் அடியே; அடிஇரண்டு தொடுத்துமன் சேறலின் தொடையே; அத்தொடை பாவி நடத்தலின் பாவே; பாஒத்து, இனமாய் வழங்கலின் இனம்எனப் படுமே. | | | | | |
16 | அடியும் சீரும் அசையும் எழுத்தும், முடிவு முதலாச் செய்யுள் மொழியின், அந்தாதித் தொடையென்று அறிதல்வேண்டும். | | | - நத்தத்தம் | | |
22 | ஒருமூன்று ஒருநான்கு அடிஅடி தோறும் தனிச்சொல் தழுவி, நடப்பது வெள்ளை விருத்தம் எனப்பெயர் வேண்டலும் விதியே. | | | - காக்கைபாடினியம் | | |
|