|
| `மோனைக்கு இனமே அஆ ஐஒளவும் இஈ எஏவும் உஊ ஒஓவும் சதவும் ஞநவும் மவவும் எனலே.' | | | -தொ. வி. 213 | | |
| `வருக்க நெடிலினம் வந்தால் எதுகையும் மோனையும் ஆமென மொழியப் படுமே.' | | | - மு.வீ.யா.ஒ. 17 | | |
| `யரலழ இடையுறின் ஆசெனப் படுமே.' | | | -18 | | |
மருட்பா இலக்கணம் |
749. | வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தும், ஒருதலைக் காமம் உற்றகைக் கிளையும், வேம்பும் கடுவும் போல்வன வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்கும்என்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் திடூஉம் வாயுறை வாழ்த்தும், பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியறி வுறுத்தும் செவியறி வுறூஉவும், ஆகிய பொருண்மையில் அமைந்தநால் வகைமேல் வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி கொள்ளத் தொடுப்பது மருட்பா ஆகும். | | | | | |
இது மருட்பா ஆமாறு கூறுகின்றது. இ-ள் : நினக்குத் தொழுகுலமாகிய தெய்வம் நின்னைப் பாதுகாப்பக் குற்றம் தீர்ந்த செல்வத்தோடு புதல்வரைப் பயந்து, புதல்வரும் அப்பெற்றியராகி எல்லீரும் நீடு வாழ்வீர் என்று தெய்வத்தைப் புறம் நிறுத்தி வாழ்த்தும் புறநிலை வாழ்த்தும், |