பக்கம் எண் :

26

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
25 அளவடி அந்தமும் ஆதியும் ஆகி,
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடையடி நிற்பின் இணைக்குறள் ஆதலும்,
ஒத்த அடித்தாய் உலையா மரபொடு
நிற்பின் நிலைமண் டிலமா குதலும்,
 
 

 - பழைய நூற்பா

 
33 ஆய்தமும் ஒற்றும் அளபுஎழூஉ நிற்புழி
வேறுஅலகு எய்தும் விதியின ஆதலும்,
 
 

 - காக்கைபாடினியம்.

 
49 உரைக்கப் படுபொருட்கு ஒத்தவை எல்லாம்
புகழ்ச்சியின் மிக்க புனைந்துரை ஆகும்.
 
 

 - பழைய நூற்பா

 
50 இயற்பெயர் சார்த்தி எழுத்துஅளபு எழினே ழு
இயற்பாடு இல்லா எழுத்தா னந்தம்.
 
 

 - பழைய நூற்பா

 

தொல்காப்பிய நூற்பாக்கள்

(சிறிது திரிந்தவை)

40 வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தும்,
 
 

 - தொல். பொ. 422

 
  வேம்பும் கடுவும் போல்வன வெஞ்சொல்
தாங்குதல் இன்றி வழிநனி பயக்கும் என்று
 
     
  ஓம்படைக் கிளவியின் வாயுறுத் திடூஉம் 424
வாயுறை வாழ்த்தும், பொங்குதல் இன்றிப்
 
 

 - தொல். பொ. 424

 
  புரையோர் நாப்பண் அவிதல் கடன்எனச்
செவியறிவு உறுத்தும் செவியறி வுறூஉவும்;
 
 

 - தொல். பொ. 426

 
45 அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபு எனப்
பொருந்திய எட்டும், வனப்பு; அவை எட்டனுள்
 
 

 - தொல். பொ. 313