பக்கம் எண் :

260

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `வேதவாய் மேன்மகனும் வேந்தன் மடமகளும்
நீதியால் சேர்ந்து நிகழ்ந்த நெடுங்குலம்போல்
ஆதிசால் பாவும் அரசர் வியன்பாவும்
ஓதியவாறு ஒன்ற மருட்பாவாய் ஓங்கிற்றே.ழு

`கங்கா யமுனை சங்கமம் போலவும்
சங்கர நாரணர் சட்டகம் போலவும்
வெண்பாவும் ஆசிரி யமுமாய் விராஅய்ப்
பண்பார் புறநிலை........

`பண்ணும் திறமும் போல் பாவும் இனமுமாய்
வண்ண விகற்ப வகைஇன்றிப் - பண்ணின்
திறம்விளரிக் கில்லதுபோல், செப்பல் அகவல்
இசைமருட்கும் இல்லை, இனம்.ழு

`பண்பார் புறநிலை, பாங்குடைக் கைக்கிளை, வாயுறை வாழ்த்து,
ஒண்பாச் செவியறி என்றிப் பொருள்மிசை, ஊனமில்லா
வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால்
வண்பால் மொழிமடவாய்! மருட்பா வெனும் வையகமே.ழு
 
 

 -யா.கா.36

 
  `வெள்ளை, முந்திஇறுதி அகவலதாகி முடியுமென்றால்,
இந்து நுதல்மடவாய்! மருட்பா வென்றியம்புவரே.ழு
 
 

 -வீ. சோ. 119

 
  மருட்பா வெண்டளை வந்தபின் அகவல்
ஈற்றின் மருளும் இயல்புடைத்து என்ப.ழு
 
 

-தொ.வி.238

 
  `புறநிலை கைக்கிளை என்றிப் பொருள்மிசை
வெண்பா முதல்வந் தகவல்பின் வருவது
மருட்பா எனப்பெயர் வைக்கப் படுமே.ழு
 
 

 - மு. வீ. யா. செ. 61