பக்கம் எண் :

262

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

செந்துறைச்சிதைவுக்குறள் தாழிசைக்குச் செய்யுள்:

  `அறுவர்க் கறுவரைப் பெற்றும் கவுந்தி
மறுவறு பத்தினி போல்வையி னீரே'
 
 

- யா. கா. 27 மே.

 

 [இஃது உலகியலுக்கு மாறுபட்டிருத்தலின் செந்துறைச் சிதைவாயிற்று]

எனவும்,

சந்தழி குறள் தாழிசைக்குச் செய்யுள்:

  `வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டையள் அல்லள் படி'
 
 

- யா. கா. 27 மே

 

[வரிவளைக்கை - திருநுதலாள் - கலித்தளை]

எனவும் வரும். பிறவும் அன்ன. (41)

விளக்கம்

வெண்செந்துறைக்குச் செய்யுள் :

  `செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத்
தம்பொன் மேருவுக் கடிமுடி இன்றே.'
 
 

- சி. செ. கோ. 29

 

ஈற்றடி குறைந்த குறள்தாழிசைக்குச் செய்யுள்:

  `கம்பை மாநதி யின்க ரைச்சிறு கன்னி பார முலைத்தழும்பணி
உம்பர்கோன் விடைஒன் றுலகேழும் உண்டதுவே.'
 
 

- 30

 

செந்துறைச் சிதைவுக் குறள் தாழிசைக்குச் செய்யுள்:

  `முன்புல கீன்ற முகிழ்முலைக் கன்னியோ
டின்புறும் யோகி எழுபுவிக் கரசே.'
 
 

- 31

 

சந்தழி குறள் தாழிசைக்குச் செய்யுள்:

  `பின்றாழ் நறுங்கூந்தல் பிடிதழீஇ மால்யானைக்
கன்றீனும் முக்கட் களிறு.'
 
 

- 32