பக்கம் எண் :

264

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

கூன் ஆமாறு

751. அடிமுதல் பொருள்உற வருவது கூன் ; அஃது
இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப.
 
     
மேல் கூறப்பட்ட செய்யுட்கு எல்லாம் இன்னும் ஒருவாற்றான் இலக்கணம் எய்துவிப்பான்
புகுந்தவற்றுள் இஃது கூன் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : அடி முதற்கண் செய்யுள் பொருள்படத் தனியே வந்து நிற்பது கூனாம் ;
அக்கூன் வஞ்சியுள் இறுதிக்கண்ணும் வந்து நிற்கும் என்று கூறுவர் புலவர் என்றவாறு.

     கூன் போறலின் கூன் ஆயிற்று. எனவே, தனி நிற்றல் பெற்றாம்.
இதனைத்தனிச்சொல் என்பாரும் உளர்.
     வரலாறு.
  `உதுக்காண்,
சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்
பரந்தானாப் பல்புகழ் பாடி, -- இரந்தார்மாட்
டின்மை அகல்வது போல, இருள்நீங்க
மின்னும் அளிதோ மழைழு
 
 

 - யா. கா. 45 மே.

 
என்னும் வெண்பாவினுள் `உதுக்காண்ழு எனவும்,
  `அவரே,
கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே;
யானே,
தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப்
பாடமை சேக்கையுள் படர்கூர்ந் திசினே;