| அன்னள் அளியள் என்னாது, மாமழை இன்னும் பெய்ய ழுழங்கி, மின்னும்; தோழி,என் இன்னுயிர் குறித்தே;' | | | குறுந்.216 | | |
என்னும் ஆசிரியத்துள் அவரே எனவும் யானே எனவும், |
| `உலகினுள், பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே, பிறழினும் இருந்தகைய இறுவரையின் எரிபோலச் சுடர்விடுமே, சிறுதகையார் சிறுதகைமை சிறப்பெனினும், பிறழ்வின்றி, உறுதகைமை உலகிற்கோர் ஒப்பாகித் தோன்றாதே' | | | - யா. கா. 45 மே. | | |
என்னும் கலியுள் உலகினுள் எனவும், |
| `உலகே, முற்கொடுத்தார் பிற்கொளவும் பிற்கொடுத்தார் முற்கொளவும் உறுதிவழி ஒழுகுமென்ப; அதனால், நற்றிறம் நாடுதல் நன்மை; பற்றற யாவையும் பரிவறத் துறந்தே' | | | - யா. கா. 45 மே. | | |
என்னும் வஞ்சியும் உலகே எனவும், அடிமுதற் கண்ணும், |
| `மாவழங்கலின் மயக்குற்றன -- வழி' | | | - யா. கா. 45 மே. | | |
என்னும் வஞ்சிஅடியுள் வழி என இறுதிக்கண்ணும் வந்தவாறு காண்க. |
| இறுதியும் என்ற உம்மையால், `கலங்கழாஅலின் துறை கலக்குற்றன.' | | | - யா. கா. 45 மே. | | |
என்னும் வஞ்சி அடியின் இடைக்கண் `துறை' என வருதலும் கொள்க. பொதுப்படக் கூறிய அதனால் சீரானும் அசையானும் அன்றிச் |
| `சிறுகுடி யீரே சிறுகுடி யீரே' | | | - கலி. 38 | | |
என அடியானும் கூன் வருதல் கொள்க. பிறவும் அன்ன. | (42) |