பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 43, 44

269

 
  `எழுத்தல் கிளவியின் அசையொடு சீர்நிறைத்து
ஒழுக்கலும், அடியொடு தளைசிதை யாமை
வழுக்கில் வகையுளி சேர்த்தலும் உரித்தே.'
 
 

 - அவிநயம்

 
  `குன்றியும் தோன்றியும் பிறிதுபிறிது ஆகியும்
ஒன்றிய மருங்கினும் ஒருபுடை மகாரம்
அசையும் சீரும் அடியும் எல்லாம்
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே.'
 
 

- நத்தத்தம்

 
வாழ்த்தும் வசையும் ஆமாறு 43
753. வாழ்த்து மெய்வாழ்த்து இருபுற வாழ்த்துஎனப்
போற்றல் வேண்டும்; வசையும்அவ் வகைத்தே.
 
     
இது வாழ்த்தும் வசையும் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : வாழ்த்து மெய்வாழ்த்தும் இருபுற வாழ்த்தும் என இரு வகைத்தாகப்
பாதுகாத்து அறிதலை விரும்பும் ஆசிரியன்; வசையும் அவ்விரு வகையினை
உடைத்தாம் என்றவாறு.

     வரலாறு :
  `கார்நறு நீலம் கடிக்கயத்துள் வைகலும்
நீர்நிலை நின்ற பயன்கொலோ? -- கூர்நுனைவேல்
வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியால்
கொண்டிருக்கப் பெற்ற குணம்'
 
 

 - யா. கா. 45 மே.

 
என மெய்வாழ்த்தும், [உண்மையாக வாழ்த்துவது]
  `பண்டும் ஒருகால்தன் பைந்தொடியைக் கோட்பட்டு
வெங்கடம் வில்லேற்றிக் கொண்டுழந்தான்; - தென்களந்தைப்
பூமான் திருமகளுக் கின்னும் புலம்புமால்,
வாமான்தேர் வையையார் கோ'
 
 

- யா. கா. 45 மே.