பக்கம் எண் :

செய்யுளியல் - முன்னுரை

27

 
  அம்மை தானே அடிநிமிர்பு இன்றிச்
சின்மென் மொழியால் சீர்புனைந்து யாத்துலும்,
 
 

-தொ.பொ.547

 
  செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின்
அவ்வகை தானே அழகுஎனப் படுதலும்,
 
 

 548

 
  தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழைமைமேற்று ஆகலும்,
 
 

549

 
  இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்
பரந்த மொழியால் அடிநிமிர்ந்து ஒழுகினும்
அன்னவை இரண்டும் தோல்என அறைதலும்,
 
 

550

 
  விருந்து தானே பொருந்தக் கூறின்
புதுவது புனைந்தயாப் பின்மேற்று ஆகலும்,
 
 

551

 
  ஞணநம னயரல வழள என்னும்
புள்ளி இறுதி இயைபுஎனப் புகறலும்,
 
 

552

 
  தெரிந்து மொழியான் செவ்விதின் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
புலன்எனப் படுதலும், புலன்நன்கு உணர்ந்தோர்
 
 

553

 
  ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது
குறள்அடி முதலா ஐந்தடி காறும்
ஓங்கிய சொல்லான் ஆங்கனம் மொழியின்
இழைபுஎனப் படுதலும் எய்தும் என்ப.
 
 

554

 
48 வண்ணந் தானே, நாலைந்து, அவைதாம்
பாஅ வண்ணம்1 தாஅ வண்ணம்2
வல்லிசை வண்ணம்3 மெல்லிசை வண்ணம்4
இயைபு வண்ணம்5 அளபெடை வண்ணம்6
நெடுஞ்சீர் வண்ணம்7 குறுஞ்சீர் வண்ணம்8
சித்திர வண்ணம்9 நலிபு வண்ணம்10
அகப்பாட்டு வண்ணம்11 புறப்பாட்டு வண்ணம்12
ஒழுகு வண்ணம்13 ஒரூஉ வண்ணம்14