பக்கம் எண் :

270

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `தந்தை இலைச்சுமடன் தாய்தொழிலி தான்பார்ப்பான்,
எந்தைக்கிஃ தெங்ஙனம் பட்டதுகொல்? -- முந்தை
அவிஉணவி னார்தெரியின் ஆவதாங் கொல்லோ
கவிகண்ண னார்தம் பிறப்புழு
 
 

- யா. கா. 45 மே.

 
என மெய் வசையும்,     [இதுவும் இருபுற வாழ்த்து என்பதே சாலும்]
  `படையொடு போகாது நின்றெறிந்தான்; என்றும்
கொடையொடு நல்லார்கண் தாழ்ந்தான்; -- படையொடு
பாடி வழங்கும் தெருவெல்லாம் தான்சென்று
கோடி வழங்கு மகன்ழு
 
 

 - யா. கா. 45 மே.

 
என இருபுற வசையும் வந்தவாறு காண்க.

(44)

விளக்கம்

     `கார்நறு ....... குணம்ழு

     நீலம் தவம் செய்து பாண்டியன் தன்னைச் சூட்டிக்கொள்ளும் வாய்ப்பினைப்
பெற்றது என்பது வெளிப்படை வாழ்த்து.

     `பண்டும் ...... கோழு

     பண்டு இராமனாக அவதரித்து வில் வீரம் காட்டிதிருமாலே இன்று
பாண்டியனாகத் தோன்றித் தென்களந்தைச் செல்வமாகிய திருமகளை அடைய
முயல்கிறான் என்பது குறிப்பாகப் பெறப்படுதலின் வைவது போன்ற வாழ்த்து.

     முன்பு சீதைக்காகப் புலம்பியவன் இப்பொழுது தென்களந்தை மன்
திருமகளுக்காகப் புலம்புகிறான் என்ற வெளிப்படை வசையிலே மேல்குறித்த குறிப்பு
வாழ்த்து அமைந்தமை காண்க.

     `தந்தை ............ பிறப்புழு

     தந்தை இலையாலாகிய சும்மாடு வைத்திருப்பவன். தாய் வேலைக்காரி. தான்
உலகியலை நோக்காது வேதாந்தத்தை