செய்யுளியல் - நூற்பா எண் 44, 45 | 271 | | நோக்குபவன். கண்களோ கவிந்த கண்கள். முகமோ யானை முகம். இவனைத் தேவர் வழிபடுவது என்னே என்பது வசை. ஆனால் தந்தை கங்கைசூடிய சிவன்; தாய் ஐந்தொழிலியாற்றும் பராசக்தி. தான் வேதம் நாடும் பெருந்தெய்வம் என்ற பொருளால் தேவர் வணங்குதல் பெறப்படுதலின் வாழ்த்தாகும். இப்பாடல் இருபுற வாழ்த்து என்பதே சாலும். இருபுற வசை - வாழ்த்துவதைப் போல வைதல். `படையொடு...........மகன்' பெண்களுக்குக் கொடையும் வீரருக்குப் புத்தாடையும் வழங்கும் கொடையாளன் என்று வாழ்த்துவது போலப் போர்க்களத்திற்குப் போரிடச் செல்லும் ஆற்றலின்றிப் பாடி வீட்டில் தங்கி வீரருக்கு ஆடை வழங்குவதிலும் மகளிரோடு இருப்பதிலும் காலங்கழிக்கும் வீரமிலி என்று குறிப்பாக வைதவாறு. | 44 | எண் வனப்பிலக்கணம் | 754. | அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபுஎனப் பொருந்திய எட்டும் வனப்பு; அவை எட்டனுள், அம்மை தானே அடிநிமிர்பு இன்றிச் சின்மென் மொழியால் சீர்புனைந்து யாத்தலும், செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின் அவ்வகை தானே அழகுஎனப் படுதலும், தொன்மை தானே சொல்லுங் காலை உரையொடு புணர்ந்த பழமைமேற்று ஆகலும், இழும்என் மொழியால் விழுமியது நுவலினும் பரந்த மொழியால் அடிநிமிர்ந்து ஒழுகினும் அன்னவை இரண்டும் தோல்என அறைதலும், | | | | | | |
|
|
|