272 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | | விருந்து தானே பொருந்தக் கூறின் புதுவது புனைந்தயாப் பின்மேற்று ஆகலும், ஞணநம ணயரல வழள என்னும் புள்ளி இறுதி இயைபுஎனப் புகறலும், தெரிந்த மொழியான் செவ்விதின் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலன்எனப் படுதலும், புலன்நன்கு உணர்ந்தோர் ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது குறள்அடி முதலா ஐந்தடி காறும் ஓங்கிய சொல்லான் ஆங்கனம் மொழியின் இழைபுஎனப் படுதலும், எய்தும் என்ப. | | | | | | இது வனப்பு ஆமாறு கூறுகின்றது. இ-ள் : அம்மை முதலாகப் பொருந்திய எட்டும் வனப்பாம்; அவ்வெட்டனுள் அம்மை ஆவது சில அடியாகிச் சிலவாய மெல்லியவாய சொற்களால் ஒள்ளிய பொருள்மேல் இனிது தொடுக்கப்படுதலையும், செய்யுட்கு உரிய சொற்களால் ஓசை இனியவாகத்தொடுப்பின் அவ்வகைப்பட்ட செய்யுள் அழகு என்று சொல்லப்படுதலையும், தொன்மையாவது கூறுமிடத்துப் பழைமைத்தாகி நிகழ்ந்த பெற்றி உரைக்கப்படும் இராகவ சரிதம் பாண்டவ சரிதம் முதலியவற்றின் மேற்று ஆதலையும், இழும் என்னும் மெல்லியவாய சொற்களால் விழுமியவாய்க் கிடப்பனவும் எல்லாச் சொற்களோடும் பல அடி உடையவாய்க் கிடப்பனவும் என்று இத்தன்மையவாகிய இரு திறத்தினையும் தோல் என்று சொல்லுதலையும், | | |
|
|