பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 45

273

 
     விருந்தாவது பொருந்தக்கூறும்இடத்து இப்பொழுது உள்ளாரைப் பாடுவனவற்றின்
மேற்று ஆதலையும்.

     ஞணநமண யரலவழள என்னும் பதினொரு புள்ளியும் ஈறாக வந்த செய்யுட்களை
இயைபு என்று சொல்லுதலையும்,

     வழக்கச்சொல்லினானே பொருள் தோன்றத் தொடுக்கப்பட்டு, ஆராயவேண்டாமல்
பொருள் தோன்றுவதனைப் புலன் என்று சொல்லப்படுதலையும்.

     இலக்கணங்களை அறிந்தோர், ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து யாதும் தீண்டாது
செய்யுளியல் உடையார் எழுத்து எண்ணி அடிவகுக்கப்பட்ட குறள்அடி முதலாகப்
பதினேழ்நிலத்து ஐந்து அடியும் முறையானே உடையவாய் ஓங்கிய சொற்களால்
அவ்வாறு மொழியின் இழைபு என்று சொல்லப்படுதலையும் பொருந்தும் என்று கூறுவர்
புலவர் என்றவாறு.
வரலாறு :
  `அறிவினான் ஆகுவது உண்டோ? பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை'
 
     
என அம்மையும்,
  `துணிஇரும் பரப்பகம் குறைய வாங்கி
அணிகிளர் அடுக்கல் முற்றிய எழிலி
காலொடு மயங்கிய கனைஇருள் நடுநாள்,
யாங்குவந் தனையோ? ஓங்கல் வெற்ப!
நெடுவரை மருங்கின் பாம்புஎன இழிதரும்
கடுவரல் கலுழி நீந்தி,
வல்லியம் வழங்கும் கல்அதர் நெறியே'
 
 

 - யா. கா. 45 மே.

 
என அழகும்,