|
(முற்கு - முக்குதல் ; விளை - சீழ்க்கையடித்தல்) அனுகரணம் - போலச் செய்தல்.) |
| `மன்றலங் கொன்றை மலர்வேய்ந்து, மஃஃறற (உஃகுவஃகு) என்று திரியும் இடைமகனே ! - சென்று மறிஆட்டை உண்ணாமல், வண்கையால் வல்லே, அறியாயோ, அண்ணாக்கு மாறுழு | | | - யா. கா. 45 மே. | | |
(இஃது அவிநயனார் காட்டிய பாட்டு) என வரும். ஒழிந்தனவும் இடைக்காடனார் பாடிய ஆசிரிய முறியுள் கண்டு கொள்க. |
இதனான் அறிக. | (46) |
ஒத்த நூற்பா |
| `எழுத்தல் இசையே அசையொடு சீர்க்கண் நிறைக்கவும் படுமென நேர்ந்திசி னோரே.ழு | | | | 46 | |
ஒப்பு ஆமாறு |
756. | ஒப்புஎனப் படுவது ஓதிய செய்யுளுள் தப்பினும் ஒருபுடை சார்த்திமற்று அவற்றையும் செப்பிய பாவொடு சேர்த்தனர் கொளலே. | | | | | |
இஃது ஒப்பு ஆமாறு கூறுகின்றது. இ-ள் : ஒப்பு என்று சொல்லப்படுவது மேல் சீரும்தளையும் முதலியன வரையறுக்கப்பட்ட செய்யுளுள் சிலசொன்ன பெற்றியில் திரிந்தும் மிக்கும் குறைந்தும் வந்தாலும், ஒருபுடை ஒற்றுமை நோக்கிச் சார்த்தி, அங்ஙனம் தவறிய செய்யுட்களையும் இலக்கண நெறியால் முன் ஓதிய செய்யுட்களின்பால் படுத்திக்கொள்க என்றவாறு. |