பக்கம் எண் :

28

 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  எண்ணு வண்ணம்15 அகைப்பு வண்ணம்16
தூங்கல் வண்ணம்17 ஏந்தல் வண்ணம்18
உருட்டு வண்ணம்19 முடுகு வண்ணம்20 என்று
ஆங்குஎன மொழிப அறிந்திசி னோரே.
 
 

 - தொல். பொ. 524, 525

 
51 அவைதாம்,
பாட்டுரை நூலே மந்திரம் பிசியே
முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும்
ஆகும் என்ப அறிந்திசி னோரே.
 
 

 - தொ. பொ. 391

 

இவ்வாசிரியர் தாமே யாத்த நூற்பாக்களும்,
அவற்றின் பகுதிகளும்

1 செய்யுள் என்பது தெரிவுஉறக் கிளப்பின்
முன்னர்க் கூறிய முறைமைத்து ஆகி
எழுத்துஅசை சீர்தளை அடிதொடை என்ற
மூஇரண்டு உறுப்பும் மேவரச் சிவணிப்
பாவும் இனமும் எனஇரு பாற்றே.
 
     
3 அவற்றுள்,
எழுத்துமேல் கிளந்த இயல்பிற்று ஆகும்.
 
     
4 நேர்நிரை எனஅசை ஓர்இரண்டு ஆகும்.  
     
7 ...நாலசை யானும் ஓரசை யானும்
சீர்பெற நடப்பது பொதுச்சீர்; ஆங்குஅது
எண்ணிரண்டு இரண்டாய் இயறலும் நெறியே.
 
     
8 தன்சீர் தனதோடு ஒன்றலும் உறழ்தலும்
என்றுஇரண்டு ஆகும் இயம்பிய தளையே.