|
வண்ணங்கள் ஆமாறு |
757. | வண்ணம் தானே நாலைந்து; அவைதாம் பாஅ வண்ணம்1 தாஅ வண்ணம்2 வல்லிசை வண்ணம்3 மெல்லிசை வண்ணம்4 இயைபு வண்ணம்5 அளபெடை வண்ணம்6 நெடுஞ்சீர் வண்ணம்7 குறுஞ்சீர் வண்ணம்8 சித்திர வண்ணம்9 நலிபு வண்ணம்10 அகப்பாட்டு வண்ணம்11 புறப்பாட்டு வண்ணம்12 ஒழுகு வண்ணம்13 ஒரூஉ வண்ணம்14 எண்ணு வண்ணம்15 அமைப்பு வண்ணம்16 தூங்கல் வண்ணம்17 ஏந்தல் வண்ணம்18 உருட்டு வண்ணம்19 முடுகு வண்ண20மென்று ஆங்கென மொழிய அறிந்திசி னோரே. | | | | | |
இது வண்ணம் இத்துணைய என்பதும் அவற்றின் பெயரும் கூறுகின்றது. இ-ள் : வண்ணம் இருபதாம்; அவைதாம் பாஅ வண்ணம் முதலாக முடுகுவண்ணம் ஈறாகக் கிடந்தன என்று கூறுவர் புலவர் என்றவாறு. அவற்றுள் பாஅவண்ணம் சொற்சீர் அடியாகி நூலின்கண் பயின்று வரும்; |
| `அவற்றுள், பாஅ வண்ணம் சொற்சீர்த்து ஆகி நூற்பால் பயிலும்.ழு | | | - தொ. பொ. 526 | | |
என்பதுஆகலின். வரலாறு : |
| `அஇ உஅம் மூன்றும் சுட்டுழு - தொல். 31 `கொல்லே ஐயம்ழு - தொல். சொல். 268 `எல்லே இலக்கம்ழு | | | - தொல். சொல். 269 | | |
எனவரும். |