தாஅவண்ணம் இடையிட்டெதுகையான் வரும்; |
| `தாஅ வண்ணம், இடையிட்டு வந்த எதுகைத் தாகும்' | | | - தொல். பொ. 527 | | |
என்ப ஆகலின். |
| `தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல் உழவா வாடா அவ்வரி ததைஇப் பசலையும் வைகல் தோறும் பைப்பையப் பெருக நீடார் இவரென நீள்மணம் கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழி வாடாப் பௌவம் அறமுகந்து எழிலி பருவம் செய்யாது வலன்ஏர்பு வளைஇ ஓடா மலையன் வேலின் கடிது மின்னும்இக் கார்மழைக் குரலே' | | | - குறுந். 216 | | |
என வரும். |
| வல்லிசை வண்ணம் வல்லெழுத்துமிக்கு வருவது; `வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயிலும்' | | | - தொல். பொ. 528 | | |
என்ப ஆகலின். |
வரலாறு : |
| `வட்டொட்டி அன்ன வனமுடிப் புன்னைக்கீழ்க் கட்டிட்டுக் கண்ணி தொடுப்பவர் தாழம்பூத் தொட்டிட்டுக் கொள்ளும் துறைச்சேர்ப்ப ! நின்னொடு விட்டொட்டி உள்ளம் விடாஅது நினையுமேல் ஒட்டொட்டி நீங்காதோ, ஒட்டு' | | | - யா. வி. 95 மே. | | |
என வரும். |
மெல்லிசைவண்ணம் மெல்லெழுத்து மிக்கு வருவது; |
| `மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே' | | | - தொல். பொ. 529 | | |
என்ப ஆகலின். |